Monday, March 4, 2013

singam


This was my first attempt of story telling to make my daughter sleep...  நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்...


ஒரு காட்டுல ஒரு சிங்கம் இருந்தது . அது தான் அந்த காட்டுக்கே ராஜா என்றும் எல்லோரும் அது சொல்வது போல தான் கேட்க வேண்டும் என்றும் எல்லோரையும் பயம்புடுத்தி வைத்திருந்தது. அணைத்து மிருகங்களும் வேறு வழி இல்லாமல் அந்த சிங்கம் சொல்வதை கேட்டுக்கொண்டு வாழந்து வந்தனர். அப்படி யாரவது கேட்கவில்லை என்றால் அவர்கள் அந்த காட்டில் இறுக்க முடியாது.

சிங்கம் இல்லாத போது பிற மிருகங்கள் அனைவரும் கூடி சிங்கத்தை பற்றியே பேசுவார்கள். சிங்கம் அந்த காட்டிற்கு நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அனைவரும் அதை பற்றி கமென்ட் அடித்துக் கொண்டு கிசு கிசு பேசிக் கொண்டே இருப்பார்கள்.சிங்கம் செய்யும் செயல்களைப் பற்றி அவ்வாறு பேசி பேசி அந்த காட்டில் இருக்கும் எல்லா மிருகங்களும் சிங்கம் ராஜாவாக இருக்க தகுதி இல்லாதது என்று மனதிற்குள்ளேயே நினைத்து கொண்டு இருந்தன. அதனால் சிங்கம் சொல்வதை கஸ்ட்டப்பட்டுக் கேட்டுக் கொண்டு வாழ்தன.

அந்த காட்டில் இருந்த கரடி ஒன்று தனக்கு சிங்கத்தை விட அதிக சக்தி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தது. மற்ற மிருகங்கள் எல்லாம் அந்த கரடியை உசுப்பேத்த அது சிங்கம் தூங்கும் போது அதை தாக்கி கொன்று விடலாம் என்று திட்டம் தீட்டியது. கரடி சிங்கத்தை கொள்வதற்காக மரத்தடியே தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் அருகே சென்றது. கரடியின் மூச்சு காற்று பட்டவுடன் சிங்கம் முழித்துக் கொண்டு சட்டென்று திரும்பி கர்ஜித்தது. காடே அதிரும் அளவு சத்தம் கேட்கவே கரடி பயந்து நடுங்கி போய் சிங்கத்தின் மேல் இருக்கும் கொசுவை விரட்ட வந்ததாக சொன்னது. பின் சிங்கத்தை கட்டி பிடித்து டாட்டா சொல்லித் தப்பிச் சென்றது. அங்கே நடந்ததை மற்ற மிருகங்களுக்கு சொல்லி சிங்கத்தின் சக்தியை கரடி விளக்கியது. அனைவரும் சிங்கத்தின் சக்தியை உணர்தனர்.

ஒரு நாள் அந்த காட்டில் இருந்த காக்கா ஒரு மரத்தின் மேலே இருந்தது. அப்போது அங்கு வந்த காட்டு ராஜா சிங்கம் காக்காவை அமைதியாக இருக்கச் சொன்னது. மேலும் அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்பச் சொன்னது. காக்காவிற்கு இது போல விரட்டுவது பிடிக்கவே இல்லை. சற்று தூரம் பறப்பது போல பறந்து பிறகு சிங்கம் சென்றவுடன் திரும்பவும் அதே மரத்திற்கு வந்தது.கா கா கா என்று பாடியது. சற்று நேரத்திற்கு பிறகு அங்கே ஒரு வேடன் துப்பாகியுடன் வந்தான். காக்காவை குறிபார்த்து சுட்டான்.ஆஆஆ காக்கா பயந்து போனது. அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குறி தவறி காக்கா உயிர் பிழைத்தது. மூச்சு இளைக்க வேகமாக பறந்தது.எப்போது தான் காக்காவிற்கு ராஜா சிங்கம் சொன்னதை கேட்டிருந்தால் இந்த இந்த பிரச்சனையே வந்திருக்காது என்பது புரிந்தது. அதனால் தான் சிங்கம் ராஜாவாக இருக்கிறது என்பதை உணர்ந்தது. அதற்கு பின் ராஜா சொல்வதை கேட்டு நல்லபடியாக வாழ்ந்தது.

இதே போல் காலப்போக்கில் அனைத்து மிருகங்களும் சிங்கத்தின் திறமையை உணர்ந்து சிங்கம் போன்ற ஒரு ராஜா  தேவை என்பதை புரிந்து கொண்டனர். அதன் பின் எல்லோரும் ஜாலியாக சிங்கம் சொல்வதை கேட்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்..