Wednesday, September 14, 2016

Rain

அன்று  காலை  நான்  தூங்கி  எழும்போது,  மழை  கொட்டு  கொட்டு  என்று கொட்டியது.   அப்பாவுடன்  நான்   வெளியே சென்று  ரோட்டில்  தண்ணீர்  அளவு எவ்வளவு  என்று  பார்த்தேன்.   அப்போது  மழை நீர்  ரோட்டை  மறைத்தது.  இந்த முறை  வீட்டிற்குள்  வந்தால்  ஜிங்கு  ஜிங்கு  என்று  குதிக்கலாம்  என்றிருந்தேன். ஆம்,  சென்ற முறை  மழை   பெய்த போது  ( 2 வாரம்  முன்பு)  வீட்டிற்கு  2  அடி  கீழ் வரை  தான்  தண்ணீர்  வந்தது.  இன்று  அதைவிட  பலமாக  பெய்வதாகத்  தான் தெரிகிறது.

சற்று  நேரத்தில்  கரண்ட்  கட்  ஆகி  விட்டது.   வீட்டில்  இன்வர்ட்டர்  இருந்தாலும் இன்டர்நெட்டுக்கு  இன்வர்ட்டர்  கனெக்சன்   கொடுக்க வில்லை.  கொஞ்ச நேரம் வீட்டுக்குள்  பால்  வைத்து  விளையாடி  விட்டு,  பின்  மாடிக்குச்  சென்று  மழையில் நனைந்தோம்   வீட்டுக்கு  வெளியே  சென்று  தண்ணீர்  அளவு  எவ்வளவு  வந்துள்ளது என்று  பார்த்தோம்.  இந்த  வேலையைத்  தான்  நாங்கள்  அடிக்கடி  செய்து   கொண்டு இருந்தோம்.



சாயங்காலம்  ஆகியும்  மழை  நிற்காமல்,  வீட்டு கார் பார்க்கிங்  வரை  தண்ணீர் வந்தது.  இன்று  இரவு  கண்டிப்பாக  வீட்டுக்குள்  வந்து  விடும்.  ஏ !!  எதிர்த்த  வீட்டில் அப்பா   வைத்த மணல்  மூட்டைகள்  தாண்டி  தண்ணீர்  வீட்டுக்குள்  சென்று  விட்டது. தண்ணீர்  அளவு  வேகமாக  கூட,  அப்பாவும்  பக்கத்து  வீடு  அங்க்கிலும்  எல்லா   சாமான்களையும்  மேலே  வைத்தார்கள்.  பிரிட்ஜை  எடுத்து  டெஸ்க்  மேலே  வைத்து விட்டார்கள்.  இரவு  சீக்கிரமாகத்  தூங்கி  விட்டோம்.



எப்படியும்  தண்ணீர்  வீட்டிற்குள்  வந்து  விடும்  என்று அப்பாவும்  அம்மாவும் நன்றாகத்  தூங்கி  விட்டார்களாம்.  சென்ற  முறை  தண்ணீர்  உள்ளே  வருமா  வராதா  என்ற பயத்தில்   தூங்கவே இல்லை  என்றார்கள் !!

அடுத்த  நாள்  காலை  மழை  சற்று  விட்டது.  காலையில்  மாடி  வீட்டில் எல்லோருக்கும்  டீ  போட்டு  கொடுத்தார்கள்.  அம்மா லெமன் ரைஸ்  செய்து  பக்கத்து அபார்ட்மெண்ட்  பிரெண்ட்ஸ்க்கும்  கொடுத்தார்கள்.  அவர்கள்  வீட்டுக்குள்  அதிகம் தண்ணீர்  வந்ததால்  அவர்களால்  சமையல்   செய்ய முடியவில்லை.
நிறைய  பேர்  தண்ணீரிலே  நடந்து  ஊருக்குக்  கிளம்பினார்கள்.  நாங்கள் தண்ணீரில் பாம்பு,  மீன்கள்,  நத்தை,  நாக்கு பூச்சி  ஆகியவை  பார்த்தோம்.  தண்ணீர்  சாக்கடை கலந்து  மிகவும்  அழுக்காக  இருந்தது.  சில பேர் படகில் சென்றார்கள்.



அப்பா  அடிக்கடி  மாடிக்குச்  சென்று   போன்  பேச  சென்று  விட்டார்கள்.  கீழே  போன் சிக்னல்  இல்லை.  முன்  தினம்  போல்  இன்றும்  நாங்கள்  விளையாடிக் கொண்டே இருந்தோம்.   இரவு  படுக்கப்  போகும்போது  இன்வர்ட்டர்  பேட்டரி  காலி ஆகி விட்டது.  தண்ணீர்  அளவு  மிகவும்  மெதுவாகத்  தான்  குறைந்தது.  கார்  பார்க்கிங் விட்டு  தண்ணீர்  கீழே  சென்றதும்  கார் வண்டியை  செக்  செய்தோம்.  கார்  ஸ்டார்ட் ஆக வில்லை.   வண்டி  ஸ்டார்ட்  ஆகி விட்டது.

மறுநாள் (வியாழக்கிழமை)  கரெண்ட் இல்லாத போது நாங்கள்  விளையாடும் விளையாட்டுக்கள்  தொடர்ந்தன.   காற்று  பலமாக  வீசியதால்  நாங்கள்  பட்டம் செய்து  மாடியில்  பறக்க விட்டோம்.  சரியாகப்  பறக்கவில்லை. மாலை  எங்கள் அபார்ட்மெண்ட்  வீட்டில்  இருக்கும்  அனைவரும்  மாடியில்  சென்று  கட்டில்  போட்டு உட்கார்ந்து  பேசிக்  கொண்டிருந்தோம்.  மாடி வீட்டில்  இருக்கும்  தருண்  என்ற பையனை  அனைவரும்  வாய்  அதிகம்  என்று  சொல்லுவார்கள்.  அவன்  என்னைப் பார்த்து,   " நீ  கேக்குற  கேள்விக்கு  என்னால்  பதில்  சொல்லித்  தீர  முடியலே"  என்று சொல்ல  எல்லோரும்  சிரித்தார்கள்.  அவ்வளவு  கேள்விகளா  நான்  கேட்டுடறேன்?

வெள்ளிக்கிழமை  காலை  எங்கள்  வீட்டு  மேல்  தொட்டியில்  தண்ணீர்  காலி ஆகி விட்டது.  சமையல்  வேலையும்  ஸ்டாப்  ஆனது.    எங்கள்  வீடு தெருவில்  மட்டும் இன்னும்  தண்ணீர்  வடியவில்லை.  கார்  பார்க்கிங்கில்  இருந்து  அனைவரும்  பேசிக் கொண்டிருந்தோம்    ஒரு  லாரியில்  நிறைய  ஸ்டூடெண்ட்ஸ்  வந்து  அனைவருக்கும் பிரெட்  கொடுத்தார்கள்.  நாங்களும்   வாங்கிக்  கொண்டோம்.  பின்னர் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த சில பேர் (அரசியல்வாதிகள்) லாரில வந்து பொங்கல் சாம்பார் கொடுத்தார்கள். ரெண்டு சட்டி கொடுத்தால் பொங்கல் சாம்பார் நிறப்பி கொடுபர். நாங்களும் வாங்கிக் கொண்டோம். 
எங்களுக்கு பிரட் கொடுத்த ஸ்டுடென்ட்'ஸ் எங்கள் அப்பர்த்மேன்ட்லையே பொங்கல் சாம்பார் சாப்பிட்டார்கள். தண்ணிர் அளவு இப்போது கால் முட்டி அளவு வரை குறைந்தது. அப்பா நடந்து சென்று தண்ணிர் பாட்டில்கள் வாங்கி வந்தார்கள். எங்கள் தெருவை தவிர மற்ற இடங்களில் தண்ணிர் வடிந்து விட்டதாம். 

சனிக்கிழமை காலை தெருவில்  தண்ணிர் நன்றாக குறையவே 9 மணிக்கு கரெண்ட் வந்தது. எல்லாவற்றிக்கும் சார்ஜ் போட்டோம் . போனில் இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. அப்பாவுடன் சென்று ஒரு நண்பரின் bsnl போனில் வீட்டிற்கு போன் பேசினோம். அப்போது தான் வீட்டில் அனைவரும் எங்களோடு பேசாமல் டென்ஷன் ஆகா இருப்பது தெரிய வந்தது :)

பின் சாயங்காலம் மதுரைக்கு கிளம்பினோம். கிண்டி வரை ஆட்டோவில் சென்று ட்ரெயினில் ஏறினோம். ட்ரைன் மிகவும் மெதுவாக தான் சென்றது. பெருங்குளத்தூர் சென்று பஸ்சில் ஏறி மதுரைக்கு சண்டே காலை வந்து சேர்ந்தோம்.

நான் - ஹர்ஷிகா.
அன்று - டிசம்பர் மாதம் 1, 2015.
இடம் - வேளச்சேரி, சென்னை.