நேரம் - இரவு 10 மணி.
குழந்தை : அம்மா! நான் படுத்து தூங்க போறேன்.
அம்மா : ஆமா, நீ இப்போவே படுத்து கிழிச்ச..குழந்தை : "படுத்து கிழிச்ச" (மனசுக்குள் - நியூ வர்ட் லேர்ன்ட். டாட்)
குழந்தைகள் அவர்களை சுற்றி பேசப்படுவதை கேட்டு தான் புது வார்த்தைகளை கற்றுக் கொள்கின்றனர். அந்த வார்த்தைகளை வேறு சந்தர்ப்பங்கில் எப்படி யூஸ் பண்ணலாம் என்று பழகுகின்றனர். இந்த வித்தையையும் சுற்றி நடப்பதை பின்பற்றி கற்றுக்கொள்கின்றனர்.
அம்மா : கண்ணா இப்போவே பால் கொடுக்குறேண்டா, அழாம இரு.
குழந்தை : "கொடுத்து கிழிச்ச"
(இப்போது நாம் அந்த குழந்தையை வியப்பாக பார்த்து பாராட்டினால், அவர்களது பெருமை அவர்கள் முகத்தில் அழகாக தெரியும்)
ஒரு குழந்தை முதல் முதலில் தானாக சாப்பிட கற்றுக் கொள்ளும் போது நடப்பதை பாப்போம் :
முதலில் மதிய சாப்பாடின் போது சாப்பாட்டில் கை வைக்க சென்றது குழந்தை.
அம்மா : "சோறு சுடும். ஆரட்டும்."
குழந்தை வெயிட் பண்ணி பிறகு " இப்போது ஆரி இருக்கும் " என்று கூறி ஒரு வாய் எடுத்து சாப்பிட்டது.
ஒவ்வொரு வாய் எடுக்கும் போதும், குழந்தை சோறு சுடும் என்று கூறி வெயிட் பண்ணி சாப்பிட ஆரம்பித்தது.
அம்மா : "இப்போ எல்லா சோறும் ஆரி இருக்கும். முதல் வாய்க்கு தான் வெயிட் பண்ணனும்".
இதை கேட்டு குழந்தை சாதாரணமாக சாப்பிட ஆரம்பித்தது.
அதே நாள் இரவு சாப்பிடும் போது,
குழந்தை : முதலில் சோறு சுடும் வெயிட் பண்ணி சாப்பிட வேண்டும். பிறகு ஆறிவிடும். வேகமாக சாப்பிடலாம்.
அம்மா : இப்போது ஆரிய சோறு தான் இருக்கிறது. மதியம் தான் சூடாக சோறு வைத்தேன். இப்போது சோறு சுடவில்லை. முதல் வாய்க்கும் வெயிட் பண்ண தேவை இல்லை.
குழந்தை புரிந்து கொண்டு சாப்பிட்டு விட்டது.
குழந்தை மிகவும் கவனமாக அம்மா சொன்ன விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்த விஷயத்தை எப்படி யூஸ் பண்ண வேண்டும் என்று தெரிந்துள்ளது.
அடுத்த நாள் மதியம், முதல் வாய்க்கு வெயிட் பண்ணி சாப்பிட்டு பிறகு வெயிட் பண்ணாமல் சாப்பிட்டது. மேலும் இரவு முதல் வாயில் இருந்து வெயிட் பண்ணாமல் சாப்பிட தொடங்கியது.
மேலும் காலை சாப்பிடும் போதும், பிற வகையான உணவு சாப்பிடும் போதும் தானாக முடிவு செய்து சில நேரம் வெயிட் பண்ணியும் சில நேரம் வெயிட் பண்ணாமலும் சாப்பிட தொடங்கியது. தவறாக இருந்தால் மாற்றம் செய்து கொள்ளவும் பழகி விடுகிறது அந்த குழந்தை 🙂
How AI works - டிட்டோ
No comments:
Post a Comment